கல்வி

கல்லூரிகளில் சுழற்சி முறைக்கு முற்றுப்புள்ளி - 6 நாள் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவு

கல்லூரிகளில் சுழற்சி முறைக்கு முற்றுப்புள்ளி - 6 நாள் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவு

Sinekadhara

தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக சுழற்சி முறையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும்,மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி, உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.