கல்வி

தமிழகத்தில் 4012 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது குரூப் 2 தேர்வு

தமிழகத்தில் 4012 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது குரூப் 2 தேர்வு

Veeramani

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையத்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் 2 குரூப் 2ஏ பதவிகளில் உள்ள  5,529 காலி பணியிடங்களுக்கான  டி.என்.பி.எஸ்.சி தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இதற்காக காலை 8.30 மணிக்கே மையத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் தேர்வு எழுத பலரும் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் மொத்தம் 11,78,175 தேர்வு எழுதி வருகின்றனர். காலை 9 மணிக்கு பின் வந்தவர்களை தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் எழும்பூர், வண்ணாரப்பேட்டை மையத்தில் சிலர் உள்ளே அனுமதிக்காமல் காத்திருந்தனர்.



முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் இல்லை என்றாலும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து கொண்டு வந்தனர். அதேபோல் சென்னையில் மட்டும் 7 இடங்களில் 380 தேர்வு அறைகளில்   சுமார் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவு ஜூன் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.