கல்வி

நோட்டீஸ் பீரியட் 3 மாதமா? அநியாயம் என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்

நோட்டீஸ் பீரியட் 3 மாதமா? அநியாயம் என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்

Rasus

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், வேலையை விட்டு விலக முடிவு செய்யும் போது நோட்டீஸ் பீரியட் எனும் அறிவிப்புக் காலத்தை மூன்று மாதங்களில் இருந்து நான்கு வாரங்களாக குறைக்குமாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஐ.டி நிறுவனங்களில் தற்போது அறிவிப்பு காலம் மூன்று மாதமாக உள்ளது. இந்த நியாயமற்ற நீண்ட அறிவிப்பு காலத்தை மத்திய அரசாங்கம் தலையீட்டு நான்கு வாரமாக குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆன்லைன் மனு கொடுக்கப்பட்டுள்ளது. லத்தீப் பன்சால் என்பவரால் change.org-ல் தொடங்கப்பட்டுள்ள இந்த மனுவிற்கு இதுவரை 34,000 பேர் ஆதரவளித்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது பெரும்பாலும் 15 நாட்களுக்குள் பணியில் இணையுமாறு கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், மூன்று மாதங்களுக்கு நோட்டீஸ் பீரியட் வேலை பார்க்க வேண்டும் எனவும், உடனடியாக வெளியேற நினைக்கும் ஊழியர்கள் தங்களது 3 மாத சம்பளத்தை செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும் எனவும் நிறுவனங்கள் கூறுகின்றன. இது அநியாயம் என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.

ஆனால் ஐடி நிறுவனங்கள் தரப்பில், வெளியே செல்லும் ஊழியருக்கான மாற்று நபரை தேர்ந்தெடுக்கவும் அவர் நிறுவனத்தில் வந்து கற்றுக் கொள்ளவும் இந்த 3 மாத காலம் அவசியம் என கூறப்படுகிறது.