கல்வி

மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற ’முக அடையாள முறை’: சிபிஎஸ்இ அறிமுகம்

மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற ’முக அடையாள முறை’: சிபிஎஸ்இ அறிமுகம்

webteam

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களைப் பெற ஆவணங்களைச் சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அதற்காக முக அடையாள முறை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிஜிட்டல் ஆவணங்களைக் கையாளும் வகையில் பர்னியாம் மஞ்சுஷா மற்றும் டிஜிலாக்கர் ஆகிய செயலிகளை பயன்படுத்திவருகிறார்கள்.

அந்த செயலிகளில் மாணவர்களின் 10, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் அட்டைகள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யமுடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது ஆவணங்கள் இல்லாமலேயே சான்றிதழ்களைப் பெற முக அடையாள முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களின் முகம், சிபிஎஸ்இ ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் ஒப்பீடு செய்யப்படும். இரண்டும் ஒரே மாதிரி இருந்தால்,  பின்னர் சான்றிதழ்கள் மாணவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.