பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 40,000லிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. என்ஏஏசி அங்கீகாரம் பெற்ற பிரிவுகளுக்கான கட்டணம் 45,000லிருந்து 55 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 70,000 ரூபாயிலிருந்து 85,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. என்ஏஏசி அங்கீகாரம் பெற்ற பிரிவுகளுக்கு 70 ஆயித்திலிருந்து 87 ஆயிரமாக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு இந்தக் கல்வியாண்டிலிருந்தே அமலாகிறது. இதற்கு முன்பு 2012-13 கல்வியாண்டில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தனியார் கல்லூரிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக, நீதியரசர் பாலசுப்ரமணியன் கட்டண நிர்ணயக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.