திருநங்கை மாணவி ஸ்ரேயா @madura_senthil | Twitter
கல்வி

‘20 வயதில் +2 தேர்ச்சி; கல்லூரி சேர்வதிலும் சிரமம்’-அவதிப்பட்ட அரசு பள்ளி திருநங்கைக்கு கிடைத்த உதவி

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற திருநங்கை மாணவி ஸ்ரேயா தனது மேற்படிப்புக்கு தேவையான உதவியை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரேயாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரேயா (20) திருநங்கை ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் ரியா தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மறுவாழ்வு முகாமில் பங்கேறிருந்தார். அங்கு ஸ்ரேயா, தான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மாணவி ஸ்ரேயா

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவி ஸ்ரேயா, அக்கௌண்ட்ஸ் பாடப்பிரிவில் 11-ம் வகுப்பில் சேர்ந்தார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தமிழகத்தின் ஒரே திருநங்கையாக தேர்வு எழுதிய இவர், 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஸ்ரேயாவின் மேற்படிப்புக்காக தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென நேற்று ஊடகங்கள் வழியாக அவர் கோரிக்கை வைத்திருந்தார்

இதனை அறிந்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருநங்கை ஸ்ரேயாவின் உயர் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாம் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் தமிழக அரசு எப்போதும் திருநங்கைகளுக்கான நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.