அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை மூடவேண்டுமென தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதுடன் தற்போது மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தொடர்பான விவரங்களை சேகரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால், சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரே பொறுப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.