கல்வி

பள்ளி மாணவியரிடம் மாதவிடாய் குறித்த கேள்வி சர்ச்சை - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

பள்ளி மாணவியரிடம் மாதவிடாய் குறித்த கேள்வி சர்ச்சை - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

Sinekadhara

பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் ஆரோக்கியம் மீதான அக்கறையின் காரணமாகவே மாதவிடாய் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துளளது.

எமிஸ் என்ற கல்வி மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, மாணவ, மாணவியரின் உடல் நலன் குறித்த விவரங்களை அதில் பதிவேற்றுமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த 64 வகையான கேள்விகளில், மாணவியருக்கான மாதவிடாய் பிரச்னைகள் குறித்த கேள்விகளும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உடல் நலன் மீதான அக்கறை காரணமாகவும் மாதவிடாய் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதில் சர்ச்சை என்றோ, தவறு என்றோ சுட்டிக்காட்ட எதுவுமில்லை என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. மேலும், மாணவியரிடம் ஆசிரியைகள்தான் மாதவிடாய் குறித்து கேள்விகளைக் கேட்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்துள்ளது.