கல்வி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!

kaleelrahman

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக் கல்லூரியில் அரசு கட்டணத்தை அமல்படுத்தக் கோரி மாணவர்களின் போராட்டம் 48வது நாளாக தொடர்கிறது. போராட்டக் களத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கல்லூரில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அமல்படுத்தக் கோரி மாணவ, மாணவிகள் 48வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் உள்ளிட்டோர் மாணவர்களுடன் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தங்களது கோரிக்கை குறித்து எந்த உறுதியும் அளிக்கபடாததால் மாணவர்கள் இரவு பகலாக போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். மேலும் கடந்த 21ஆம் தேதி முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால் நேற்று முதல் போராட்ட களத்திலேயே முதுநிலை மருத்துவ மாணவர்கள் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5வது நாளாக விடுதி உணவகங்கள் செயல்படாத நிலையில் மாணவர்களே உணவு ஏற்பாடு செய்து சாப்பிட்டு வருவதுடன் 48வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.