கல்வி

பொது முடக்க கட்டுப்பாடுகளால் 75 லட்சம் பேர் வேலையிழப்பு... ஆய்வில் தகவல்

பொது முடக்க கட்டுப்பாடுகளால் 75 லட்சம் பேர் வேலையிழப்பு... ஆய்வில் தகவல்

Veeramani

நாட்டின் பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு இதைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு 9.78% ஆகவும் கிராமப்புறங்களில் இது 7.13% ஆகவும் இருந்ததாக சிஎம்ஐஇ கூறியுள்ளது.

எனினும் கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது நிலவிய மோசமான நிலை இப்போது இல்லை என்றும் சிஎம்ஐஇ கூறியுள்ளது. கடந்த மார்ச் முதல் தொடங்கியுள்ள கொரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் முழு பொது முடக்கத்தையும் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது