கல்வி

`கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்’- ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

`கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்’- ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

webteam

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ‌‌தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

`ஒவ்வொரு தாலுக்கா அளவில் பத்திரிகை மூலம் பத்தாம் தேதி அறிவிப்பானை வெளியிட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் ஏழாம் தேதி. விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவம்பர் 14-ம் தேதிக்குள் பரிசீலனை முடிக்க வேண்டும்' எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுற்றறிக்கையில், “வாசிப்பு மற்றும் எழுத்துத்திறன் பயிற்சியை நவம்பர் 30ஆம் தேதி நடத்த வேண்டும். நேர்முகத் தேர்வை டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணை வழங்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்த வரை எழுத்துத்திறன் தேர்வு, துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து நடத்த வேண்டும். கிராமம் சார்ந்து நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்ய வேண்டும்.

வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்தும் ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்ல வேண்டும். தாசிலர்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கிராம உதவியாளர் உதவியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

-எம்.ரமேஷ்