கல்வி

பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை

பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை

webteam

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பாடத்திட்ட மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வுகள் வரும் மே 5ஆம் தேதி தொடங்க உள்ளது. மே 3ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மற்றத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பாடத்திட்ட மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் எடுக்கப்படும் முடிவு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் முடிவெடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.