கல்வி

+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு !

+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு !

webteam

இந்திய ரயில்வே துறையில், பாரா மெடிக்கல் பணியாளர்கள் மற்றும் மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஸ்டாஃப் நர்ஸ், ஹெல்த் இன்ஸ்பெக்டர், ஃபார்மசிஸ்ட் உள்ளிட்ட பாராமெடிக்கல் பணியாளர் பிரிவிற்கு 1,937 காலிப்பணியிடங்களும், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவிற்கு 1,665 காலிப்பணியிடங்களும் உள்ளன. 

காலிப்பணியிடங்கள்:
1. பாராமெடிக்கல் பணியாளர் பிரிவு - 1,937
2. மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு - 1,665

மொத்தம் = 3,602 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019

1) CEN-02/2019: - பாராமெடிக்கல் பணி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2019
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 05.04.2019, இரவு 10.00 மணி
ஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 04.04.2019, மதியம் 01.00 மணி
விண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்பிக்க கடைசி நாள்: 07.04.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் தோராயமான நாள் : ஜூன் முதல் வாரம்

2)  CEN-03-2019: - மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2019
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 13.04.2019
ஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 11.04.2019
விண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்பிக்க கடைசி நாள்: 16.04.2019
கணினி வழித்தேர்வு ஜூன் - ஜூலை 2019 இல் நடைபெறும்.

தேர்வுக்கான கட்டண விவரம்:
1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்
2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை
உட்பட) - 250 ரூபாய் 

குறிப்பு: முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து
ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப
செலுத்தப்படும்.

வயது வரம்பு:

பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

பணிகளுக்கேற்ப மாத சம்பளத்தில் மாற்றங்கள் இருக்கும்.

குறைந்த பட்சமாக ரூ. 21,700 முதல் அதிகபட்சமாக ரூ.44,900 வரை இருக்கலாம்.

தேர்வு முறை:

கணினி வழித்தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி:
1. பாராமெடிக்கல் பணிக்கு, குறைந்தபட்சமாக பி.எஸ்சி என்ற பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ச்சியோ அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்தவராகவோ இருத்தல் வேண்டும்.
 
2. மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள பணிகளுக்கு, குறைந்தபட்சமாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட வகையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பாராமெடிக்கல் பணிக்கு, https://chennai.rrbregonline.org/ - என்ற இணையத்திலும், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிக்கு,
https://chennai.rly-rect-appn.in/rrbmic2019/ - என்ற இணையத்திலும் சென்று விண்ணப்பிக்கலாம்.         

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
http://www.rrbcdg.gov.in/uploads/cen_02_2019_eng.pdf மற்றும் http://www.rrbcdg.gov.in/uploads/cen_03_2019_eng.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.