என்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் (EIL) கீழ் செயல்படும் ‘சர்டிபிகேசன் என்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட்’ (CEIL) என்ற நிறுவனத்தில் இன்ஸ்பெக்சன் என்ஜினியர் மற்றும் சேப்ஃடி என்ஜினியர் போன்ற பணிகளுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.
பணிகள்:
1. இன்ஸ்பெக்சன் என்ஜினியர் - QA / QC (Inspection Engineer)
2. சேப்ஃடி என்ஜினியர் (Safety Engineer)
காலியிடங்கள்:
1. இன்ஸ்பெக்சன் என்ஜினியர் - 164
2. சேப்ஃடி என்ஜினியர் -3
மொத்தம் = 167 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 05.07.2019 (நாளை)
மும்பையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 08.07.2019
புதுடெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.07.2019
ஜெய்ப்பூரில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.07.2019
வதோதராவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 16.07.2019
கொல்கத்தாவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2019
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
பணிகளுக்கு தகுந்தாற்போல் வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
ஊதியம்:
ரூ.41,250 முதல் ரூ.62,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, டிப்ளமோ படித்தவர்கள் முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை நேர்காணலில் பங்கு பெற தகுதியானவர்கள். பணிக்கேற்ற முன் அனுபவம் அவசியம்.
குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளை பொருத்து பணி அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://ceil.co.in/careers.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்:
மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட மாதிரி விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான கல்விசான்றிதழ்களுடன் சென்னையில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். இது குறித்த முழு தகவல்களை பெற 044-27469401 மற்றும் 044-27469402 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.