கல்வி

தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த சிபிஎஸ்இ

தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த சிபிஎஸ்இ

webteam

தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெற்றோரிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும், மறைமுகமாக எந்தவித கட்டணங்களும் வசூல் செய்யப்படக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விபரங்களை சிபிஎஸ்இ கேட்டுள்ளதாகக் கூறிய அவர், அந்த விபரங்களைச் சமர்ப்பிக்காத பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கல்வித் துறையில் தனியார் முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால், கூடுதல் கட்டணங்கள் தனியார் பள்ளிகளால் வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் சீருடைகள் விற்பது கூடாது என்று சமீபத்தில் சிபிஎஸ்இ எச்சரித்த நிலையில், கட்டண விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது.