கல்வி

‌சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

webteam

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பத்தாயிரத்து 678 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 98ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்சி முடிவு செய்தது. ஆனால் சிபிஎஸ்இயின் இந்த முடிவுக்கு மத்திய மனிதவள அமைச்சகம் தடை வித்தித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று சிபிஎஸ்சி கடந்த 25ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட இருந்த நிலையில் கருணை மதிப்பெண் வழங்குவதை திடீரென ரத்து செய்ய கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டுத்துறை மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க அனுமதி அளித்த‌து. இந்நிலையில்  தேர்வுமுடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளை WWW. CBSC. NIC. IN ‌மற்றும் WWW.CBSCRESULTS. NIC.IN உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.