கல்வி

“விரைவில் அங்கீகாரம் என பள்ளிகள் விளம்பரம்”- உஷாராக இருக்க பெற்றோர்களுக்கு அட்வைஸ்

“விரைவில் அங்கீகாரம் என பள்ளிகள் விளம்பரம்”- உஷாராக இருக்க பெற்றோர்களுக்கு அட்வைஸ்

webteam

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என சி.பி.எஸ்.இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

விரைவில் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெறப்போவதாக சில பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ கூறியுள்ளது.

எனவே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் www.cbseaff.in என்ற இணையதளத்தில் சென்று அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சி.பி.எஸ்.இ விளக்கமளித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு சமயத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வெழுத முடியாமல்போகும் சூழல் மற்றும் அது சார்ந்த புகார்களை தொடர்ந்து இந்த விளக்கத்தை சி.பி.எஸ்.இ அளித்துள்ளது.