பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்களுக்கான Management Trainee பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதில் வெளித்தேர்வர்கள் 150 பணியிடங்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும்.
பணி: - Management Trainee (MT) ( Telecom operations)
ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கிய நாள் : 26.12.2018
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் : 26.01.2019
ஆன்லைனில் தேர்வு தொடங்கும் நாள் : 17.03.2019
தகுதி: இந்தியராக இருத்தல் மிக முக்கியம்.
1. சம்பளம் (Salary): மாதம் 24,900 முதல் - 50,500 ரூபாய் வரை.
2. கல்வித்தகுதி: பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) பட்டதாரிகள் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பு படித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்யூட்டர் / ஐ.டி இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளை பயின்றவர்களாக இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேர பட்டபடிப்பை முடித்திருத்தல் அவசியம்.
கூடுதலாக எம்.பி,ஏ அல்லது எம்.டெக் பட்டம் பெற்றவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேர பட்டபடிப்பை முடித்தவர்களாகவும் இருத்தல் அவசியம்.
3. வயது வரம்பு (Age):
01.08.2019 இன் படி 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
4. தேர்வு செயல்முறை:
ஆன்லைன் வழித்தேர்வு, குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டமாக இந்த பணிக்கான தேர்வு நடைபெறும்.
5. முதற்கட்ட ஆன்லைன் தேர்வு முறை:
மொத்தம் மதிப்பெண்கள் - 450
தேர்வு கால அளவு - 3 மணி நேரம்
மூன்று பிரிவுகளின் கீழ் இந்த முதற்கட்ட தேர்வானது நடைபெறும்.
மூன்று பிரிவுகளிலும் 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் அமையும்.
6. தேர்வுக் கட்டண விவரம்:
ஓ.சி / ஓ.பி.சி பிரிவினர் - 2,200 ரூபாய்
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - 1,100 ரூபாய்
7. தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியும். வேறு எந்த வகையிலும் செலுத்த முடியாது. ஒரு முறை தேர்வுக் கட்டணம் செலுத்தி விட்டால், எந்த காரணத்தைக் கொண்டும் செலுத்திய கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.
மேலும் இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிய
http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.