கல்வி

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் பணி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் பணி!

webteam

பேங்க் ஆப் பரோடா வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் எனப்படும் மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
1. மேனேஜர் (MMG/ Scale - II)
2. சீனியர் மேனேஜர் (MMG/ Scale - III)

காலியிடங்கள்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
1. மேனேஜர் - 25
2. சீனியர் மேனேஜர் - 10
மொத்தம் = 35 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கும் நாள்: 13.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.08.2019

வயது வரம்பு:
1. மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
2. சீனியர் மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 28 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.இ / பிடெக் / எம்.சி.ஏ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் பணிசார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
பணிகளை சார்ந்து பணி அனுபவம் அவசியம் தேவை

ஊதியம்:
1. மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.45,950 வரையும் வழங்கப்படும்.
2. சீனியர் மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.42,020 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரையும் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18 - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. ஆன்லைன் தேர்வு,
2. குழுக் கலந்தாய்வு
3. நேர்முகத்தேர்வு

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
2. பொது / ஓபிசி / EWS பிரிவினர் - ரூ.600

குறிப்பு: 
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.