கல்வி

டிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு!

டிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு!

webteam

தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணாமலை பல்கலைக்கழகம் / அண்ணா பல்கலைக்கழக (உறுப்புக் கல்லூரிகள்) மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பட்டப்படிப்புகள்:
பி.இ / பி.டெக் - 3 ஆண்டுகள் (6 செமஸ்டர்கள்)
பி.இ (சாண்ட்விச்) - 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்)

முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 17.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2019, மாலை 05.00 மணி

பதிவுக்கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினர்: ரூ.300
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் போன்றோருக்கு பதிவுக்கட்டணம் கிடையாது.

குறிப்பு:
எஸ்.சி / எஸ்.டி விண்ணப்பதாரர்கள், சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழின் நகல் சமர்ப்பித்தல் வேண்டும். 

பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை: 
விண்ணப்பதாரர் வங்கி வரைவோலையில்,

“The Secretary, Second year B.E / B.Tech. Degree Admissions- 2019-20, ACGCET, Karaikudi”, என்ற பெயரில் பெற்று, பதிவுக்கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

கல்வித்தகுதி:
தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டய படிப்பு அல்லது பி.எஸ்.சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.accetlea.com / www.accet.co.in / www.accet.co.in / - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டண வரைவோலை ஆகியவற்றுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ / பி.டெக் சேர்க்கை 2019-20,
அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
காரைக்குடி - 630 003. 

குறிப்பு:
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தபால் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 16.06.2019, மாலை 05.00 மணி.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.accetlea.com/documents/Informtion_Instruction_Candidat.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.