கல்வி

சென்னை ICFஇல் அப்ரண்டிஸ் பயிற்சி...விண்ணப்பிக்க ரெடியா?

சென்னை ICFஇல் அப்ரண்டிஸ் பயிற்சி...விண்ணப்பிக்க ரெடியா?

EllusamyKarthik

ரயில்வே பணியிடங்களில் தமிழ்நாட்டினருக்கான பணிவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் சென்னை ICFஇல் தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மொத்தம் 990 இடங்களுக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் http://pbicf.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். 

கார்பெண்டர், எலக்ட்ரிஷன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், MLT ரேடியாலஜி, MLT பேத்தாலஜி மாதிரியான பணிகளில் பயிற்சி கொடுக்கப்படவுள்ளது. 

விண்ணப்பிப்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 044-26147708 என்ற எண்ணை அணுகலாம். 

15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி, பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பயிற்சிக்கு தேர்ந்தெடுப்பக்கப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 1 முதல் பயிற்சி ஆரம்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.