இந்திய ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் - சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் படித்தவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,
திறமையும் உள்ளவர்களிடமிருந்து தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மொத்த காலிப்பணியிடங்கள் = 24.
பணி : இளநிலை பொறியாளர் (சிவில்) - 15
பணி : இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) - 09
1. முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 27.01.2019
தேர்வு நடைபெறும் நாள் ( தோராயமாக) : பிப்ரவரி - 2019.
தேர்வு முடிவு வெளியாகும் நாள் : மார்ச் / ஏப்ரல் - 2019.
2. கல்வித்தகுதி: (01.01.2019 அன்று)
இளநிலை பொறியாளர் (சிவில்):
3 வருட டிப்ளமோ சிவில் பிரிவில் பயின்று, குறைந்தபட்சமாக 65% (55% - எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
(அல்லது)
4 வருட பொறியியல் சிவில் பிரிவில் பயின்று, குறைந்தபட்சமாக 55% (45% - எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்):
3 வருட டிப்ளமோ எலக்ட்ரிக்கல் பிரிவில் பயின்று, குறைந்தபட்சமாக 65% (55% - எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
(அல்லது)
4 வருட பொறியியல் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயின்று, குறைந்தபட்சமாக 55% (45% - எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. முன்அனுபவம்:
இளநிலை பொறியாளர் (சிவில்):
டிப்ளமோ சிவில் பட்டதாரிகள் குறைந்தபட்சமாக 2 வருடங்கள், பொறியியல் சிவில் பட்டதாரிகள், குறைந்தபட்சமாக 1 வருடம், சிவில் கட்டுமான பணிகள் மற்றும் / அல்லது அலுவலக கட்டிடங்கள் / வர்த்தக கட்டிடங்கள் / குடியிருப்பு வளாகங்களின் சிவில் பராமரிப்பு, RCC வடிவமைப்பு மற்றும் பிற சிவில் படைப்புகள் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்டிருப்பது, கணினி அடிப்படை அறிவு, டெண்டர்கள் தயாரிப்பு போன்ற பிரிவில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்):
டிப்ளமோ - எலக்ட்ரிக்கல் பட்டதாரிகள் குறைந்தபட்சமாக 2 வருடங்கள், பொறியியல் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பட்டதாரிகள், குறைந்தபட்சமாக 1 வருடம், பெரிய / வணிக கட்டிடங்களில் மின் நிறுவுதல் மற்றும் மேற்பார்வை, உயரழுத்த / தாழ்வழுத்த மின்நிலையங்கள், மத்திய AC தொழிற்கூடங்கள், லிஃப்ட்ஸ், யூபிஎஸ் (UPS), டி.ஜி(DG) செட் மற்றும் தீ எச்சரிக்கை அமைப்பு போன்ற பிரிவில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
4. வயது: (01.01.2019 அன்று)
20 முதல் 30 வயது வரை இருத்தல் அவசியம்.
02.01.1989 முதல் 01.01.1999 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
5. தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி/ PWD/ முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கான கட்டணம் - 50 ரூபாய்
ஓபிசி / பொதுப் பிரிவினர் போன்றோருக்கான கட்டணம் - 450 ரூபாய்
தேர்வுக் கட்டணத்தை செலுத்திய பின்பு எந்த ஒரு காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
வங்கி பரிவர்த்தனை முறை மூலம் மட்டுமே இந்த தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியும்.
6. தேர்வு செய்யப்படும் முறைகள்:
இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்திறன் சோதனை தேர்வு அடிப்படையின் கீழ் தேர்வு செய்யப்படுவர்.
7. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
முதலில் விண்ணப்பிப்போர் www.rbi.org.in என்ற இணையதள முகவரிக்கு சென்று அங்குள்ள “Recruitment related announcements" - என்பதை க்ளிக் செய்யவும். அதன் பின் “Recruitment for the post of Junior Engineer (Civil / Electrical)” - என்பதை க்ளிக் செய்யவும். பின்பு "Applicationform" - ஐ க்ளிக் செய்ய வேண்டும். கடைசியாக New registration - னில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
8. சம்பளம்:
தேர்வுகளில் வெற்றிபெற்று பணியில் சேரும் நபர்களுக்கு தொடக்க ஊதியமாக 21,400 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகைகளும் உண்டு.
9. தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் உண்டு.
இந்த பணிக்கு முழுக்க முழுக்க இடஒதுக்கீடு அடிப்படை முறையில் மட்டுமே தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான தகவல்களுக்கு
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPJECE07012019E2779FB41A5F4FABA1F30CDA9F0183AB.PDF- என்ற இணையதளத்தை பார்க்கவும்.