ஜெ.என்.என். பொறியியல் கல்லூரி முகநூல்
கல்வி

ஜெ.என்.என். பொறியியல் கல்லூரியில் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட பயிற்சி மையம்!

சென்னை ஜெ.என்.என். பொறியியல் கல்லூரியில் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

PT WEB

ஜெ.என்.என். பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) நிறுவனத்தின் கணினி பொறியியல் துறையானது சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து IOS/MAC மேம்பாட்டு மையம் தொடங்கியுள்ளது. கடந்த 08.04.2024 அன்று MacApp Studio, Chennai CEO ஜார்ஜ் கிரிஸ்டோபர் அவர்களால் இது துவங்கப்பட்டது.

அப்போது பேசிய ஜார்ஜ் கிரிஸ்டோபர், “இந்த ஆப்பிள் பயிற்சி மையமானது சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே ஜெ.என்.என். பொறியியல் கல்லூயில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த மென் பொருட்களை உருவாக்க முடியும்.

இந்த ஆப்பிள் பயிற்சி மையம் வெளிநாடுகளில் உள்ள முன்னணி ஆய்வகத்திற்கு இணையாக உள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்களுக்கும் இந்த ஆப்பிள் ஆய்வுக்கூடம் பெரும்பங்காற்றும்” என்றார்.

இக்கல்விக் குழுமத்தின் தலைவர் திரு எஸ் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் திரு நவீன் ஜெயச்சந்திரன் பொறியியல் கல்லூயின் முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.