கல்வி

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

webteam

தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக் கழகம் / சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் படிப்புகளில் முதலாமாண்டு சேருவதற்கான டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு-2019-ஐ அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இந்த நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் அதற்கான கடைசி நாள் 31.05.2019 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது, அண்ணா பல்கலைக்கழகம். முதலாமாண்டு எம்.சி.ஏ / எம்.பி.ஏ / எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் போன்ற முதுகலை பட்டப்படிப்பிற்கு சேர அல்லது தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு-2019 எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்:

1. எம்.சி.ஏ (M.C.A) - இரண்டு ஆண்டுகள்

2. எம்.பி.ஏ (M.B.A) - இரண்டு ஆண்டுகள்

3. எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் (M.E. / M.Tech. / M.Arch. M.Plan.) - இரண்டு ஆண்டுகள்


முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 08.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:
எம்.சி.ஏ (M.C.A) படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 22.06.2019 - காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை
எம்.பி.ஏ (M.B.A) படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 22.06.2019 - மதியம் 02.30 முதல் மாலை 04.30 மணி வரை
எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் (M.E. / M.Tech. / M.Arch. M.Plan.) படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 23.06.2019 - காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை

தேர்வுக்கட்டணம்:
1. எம்.சி.ஏ / எம்.பி.ஏ / எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் படிப்பு:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.250

2. எம்.சி.ஏ + எம்.பி.ஏ, எம்.சி.ஏ + எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான், எம்.பி.ஏ + எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் படிப்புகள்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.1,000
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.500

3. எம்.சி.ஏ + எம்.பி.ஏ + எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம்.ப்ளான் படிப்புகள்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.1,500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.750

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் ( பி.எஸ்.சி / பி.காம் / பி.பி.ஏ / பி.இ / பி.டெக் / பி.ஆர்க் / பி.பிளான் ) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.annauniv.edu/tancet2019- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

குறிப்பு:
மூன்று படிப்புகளுக்கும் ஒரே ஆன்லைன் விண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.annauniv.edu/tancet2019adv.pdf-என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.