கல்வி

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியீடு - பரிந்துரைகள் சொல்வதென்ன?

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியீடு - பரிந்துரைகள் சொல்வதென்ன?

கலிலுல்லா

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு தற்போது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி, 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை +2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 165 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான நடைமுறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F229584219139579%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>