ஏர் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள் & காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டண்ட் சூப்பர்வைசர்
மொத்தம் = 170 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2019
தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.11.2019
வயது வரம்பு:
01.08.2019 அன்றுக்குள், அதிகபட்ச வயது வரம்பு 33 வயது ஆக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
மேற்கண்ட பணிகளுக்கு வயது தளர்வும் உண்டு.
தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி / EWS பிரிவினர் - ரூ.1,000
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.500
3. மாற்றுத்திறனாளிகள் (Min. 40% Disability) தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.19,570 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
(அல்லது)
3 வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் / விமான பராமரிப்பு (Air Craft Maintenance) இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு படிப்பை முடித்து அத்துடன், குறைந்தபட்சம் ஒரு வருடம் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் http://aiesl.assistantsupervisor.parakh.online/ (அல்லது) http://www.airindia.in/careers.htm (அல்லது) http://aiesl.assistantsupervisor.parakh.online/home - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த தகவல்களைப்பெற,
http://www.airindia.in/writereaddata/Portal/career/840_1_Notification-18102019-CORRIGENDUM.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.