கல்வி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பட்டயப்படிப்புகள்!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பட்டயப்படிப்புகள்!!

webteam

தமிழகம் முழுவதும் உள்ள அரசு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள், இணைப்பு (தனியார்) கல்வி நிலையங்களில் இரண்டு ஆண்டு பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி

பட்டயப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவில் உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களைப் பயின்று தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.

வேளாண் கல்வி நிலையங்கள்

குமுளூர். வம்பன் பேச்சிப்பாறை ஆகிய ஊர்களில் உள்ள அரசு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள், தனியார் இணைப்புக் கல்லூரிகள், தோட்டக்கலைக் கல்லூரிகளில் மேற்கண்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து வேளாண் கல்வி நிலையங்களில் (வம்பன் தவிர) ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. வம்பன் வேளாண் கல்வி நிலையத்தில் மட்டும் தமிழ் பயிற்றுமொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, பின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் மற்றும் சான்றிதழ்களை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: முதன்மையர் (வேளாண்மை), மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேலாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003

முக்கிய தேதிகள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதிகள்: 10. 9.2020 முதல் 16.10.2020 வரை.
விண்ணப்பங்கள் அஞ்சல்வழியில் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 21.10.2020 மாலை 5 மணி

தொடர்புக்கு: 0422 -6611345, 6611346, 6611322, 6611328
விவரங்களுக்கு: ugadmissions@tnau.ac.in