கல்வி

பொதுத் தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு அறிவுரை

பொதுத் தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு அறிவுரை

Rasus

பிளஸ்டூ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்கு அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்ப்புதுறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அலைபேசியை தேர்வு மைய வளாகத்திற்கு எடுத்துவந்து அதனை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், தேர்வுத்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைக் கோரக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 14 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவலர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேர்வுகள் எவ்வித முறைகேடுகள் இல்லாமல் நடைபெற, முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் தேர்வு மையங்களில் நிலையான படை உறுப்பினர்கள் மொத்தம் 275 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.