கல்வி

இனி நீட் மூலமே ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் மருத்துவ சேர்க்கை..!

இனி நீட் மூலமே ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் மருத்துவ சேர்க்கை..!

Rasus

ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர அடுத்தாண்டு முதல் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மட்டுமே நடைபெறும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. அதேசமயம் ஜிப்பர், எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகள் சேர தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த முறை தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர அடுத்தாண்டு முதல் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மட்டுமே நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி, 2020-ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அதன்படி ஒரே ஒரு மருத்துவ பொது கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி, நெக்ஸ்ட் தேர்வு முடிவுகளை வைத்தே மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேர முடியும். அதனைப்போல வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். இதுமட்டுமில்லாமல் பயிற்சிக்கான உரிமங்கள் பெறவும் நெக்ஸ்ட் தேர்வின் முடிவுகள் முக்கியமானது.