கல்வி

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், வேலைவாய்ப்புகளும் - A to Z வழிகாட்டுதல்

Sinekadhara

ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்? அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.

கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம். ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங் படிப்புடன் ஆங்கில அறிவை வளர்ப்பது வேலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே கேட்டரிங் மாணவர்கள் தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது முக்கியம். இந்த கேட்டரிங் படிப்புகள் வேலைவாய்ப்புகளை அள்ளித்தருகின்றன.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்

சர்டிபிகேட் கோர்ஸ்: சர்டிபிகேட் கோர்ஸ் இன் பேக்கரி, சர்டிபிகேட் கோர்ஸ் இன் குக்கரி, சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஹோட்டல் ரிசப்ஷன் & ஹவுஸ் கீப்பிங், சர்டிபிகேட் கோர்ஸ் இன் ரெஸ்டாரன்ட் & கவுன்ட்டர் சர்வீஸ், சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஃப்ரன்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஹோட்டல் ரிசப்ஷன் & ஹவுஸ் கீப்பிங், கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஃபுட் புரொடக்‌ஷன்.

டிப்ளமோ: டிப்ளமோ இன் ஹோட்டல் ஆபரேஷனல் மேனேஜ்மென்ட், டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி, டிப்ளமோ இன் ஃபுட் புரொடக்‌ஷன், டிப்ளமோ இன் ஃப்ரன்ட் ஆபிஸ் ஆபரேஷன், டிப்ளமோ இன் ஹவுஸ் கீப்பிங் ஆபரேஷன்.

இளங்கலை: பி.எஸ்.சி. கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.எஸ்.சி. ஹாஸ்பிட்டாலிடி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், பி.ஹெச்.எம்., பி.பி.ஏ. சமையல் கலை

முதுகலை: எம்.எஸ்.சி. ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ. ஹாஸ்பிட்டாலிட்டி & டூரிஸம் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ. இன் டூரிஸம், எம்.பி.ஏ. சமையல் கலை

பி.எச்.டி.

எங்கு படிக்கலாம்?

  • இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட்ரிஷன், சென்னை
  • ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி, துவாக்குடி

இவைதவிர, 50-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை கற்கலாம்.

வேலைவாய்ப்பு: அரசு, ராணுவம், கடற்படை, விமானப்படை, சுற்றுலாத்துறை, ரயில்வே, தனியார், நட்சத்திர விடுதிகளில் செஃப், கேட்டரிங் மேனேஜர், ஹோட்டல் ஆபரேஷன்ஸ் மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன் எக்ஸிகியூட்டிவ், ஃப்ரன்ட் ஆபிஸ் எக்ஸிகியூட்டிவ், எக்ஸிகியூட்டிவ் ஹவுஸ் கீப்பர், ஈவன்ட் மேனேஜர் போன்ற வேலைவாய்ப்புகள் கோர்ஸ்களுக்கு ஏற்றவாறு உள்ளன.

இது தவிர கப்பல், விமானம், ஐ.டி. துறை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும், சொந்தத் தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.