கல்வி

பி.ஏ, பிஎஸ்சி முடித்திருக்கிறீர்களா? கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பி.ஏ, பிஎஸ்சி முடித்திருக்கிறீர்களா? கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

webteam

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு 7 விதமான வேலைவாய்ப்பை அறிவித்து இருக்கிறது கூகுள் இந்தியா நிறுவனம்.
உலகிலேயே மிகவும் சிறப்பான பணிச்சூழல் உள்ளதாகக் கருதப்படும் நிறுவனங்களில் ஒன்று கூகுள். அங்கு பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கூடிய நிம்மதியான வழக்கையை பெற்று வருகின்றனர். 
பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் கூகுள் உலகிலேயே சிறந்த நிறுவனமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் அலுவலகங்களை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிச்சூழலை இலகுவாக்க கூடைப்பந்து மைதானம், இயற்கையான தோட்டங்கள், ஆண்ட்ராய்டு பார்க், ரெஸ்டாரெண்ட், மியூசிக் அறைகள்  உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 
லட்சக்கணக்கானோர் பணியாற்றி வரும் கூகுள் தற்போது, இந்தியாவில் உள்ள டிகிரி முடித்த  இளைஞர்களுக்கு 7 வகையான வேலைகளை அறிவித்து விண்ணப்பிக்கக் கோரி இருக்கிறது. 
1. டிசைனர்
டிசைனர் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், உலகில் உள்ள கோடிக்கணக்கான கூகுள் பயன்பாட்டாளர்களை கவரும் வகையில் டிசைன் பணியில் ஈடுபவர். அவர்கள் டிசைனர் டீமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்களின் ஆலோசனைகளின்படி அவர்கள் வடிவமைக்கும் டிசைன்கள் கூகுள் நிறுவனங்களின் கூகுள் க்ரோம் ஓஎஸ், ஜிமெயில் உள்ளிட்ட பல பிரிவுகளில் பயன்படுத்தப்படும். 
இந்தப்பதவிக்கான தகுதி குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். தகுந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி அதிகம் உள்ளவர்களுக்கும், வெப் டிசைனிங் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். 

2. கூட்டுப் பொறியாளர்கள்- கூகுள் க்ளவுட்
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள் க்ளவுட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கூகுள் க்ளவுட் விற்பனை பிரிவுடன் இணைந்து வாடிக்கையாளர்களை கொண்டு வர வேண்டும்.  டெக்னிக்கல் அனுபவத்துடன் வியாபார நுணுக்கங்களை அறிந்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்சம் பி.ஏ, பிஎஸ்ஸி கணினி அறிவியல் படித்தவர்கள் தொழில்நுட்ப அறிவு, கள அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 
3. மொழி மேலாளார் (ஹிந்தி)
உலகம் முழுவதையும் இணைக்கும் நிறுவனமாக திகழும் கூகுளின் ஆலோசகர் பதவி இது. தங்களது பகுதிக்கு ஏற்ற கூகுள் சேவை பற்றிய ஆலோசனைகளை  வழங்க வேண்டும்.  இந்தப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தப்பகுதிக்கான கூகுள் தொழில் நுட்பசேவை, கூகுள் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், பங்குதார்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இந்தபதவிக்கு விண்ணப்பபிப்பவர்கள் அந்த வட்டார மொழியை அறிந்து மொழிபெயர்த்து தருவது அவசியம். இந்தபதவிக்கு குறைந்த பட்சம் பிஎஸ்சி பட்டப்படிப்போ, அல்லது அதற்கு சமமான பயிற்சியோ பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி, ஆங்கில மொழியறிவு அவசியம். எம்.பி.ஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

4. க்ளவுட் ஆலோசகர்
கூகுள் க்ளவுட் ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவ்பவர்கள் கூகுள் வாடிக்கையாளர்களால் தொழில்நுட்ப ரீதியாக தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி அதற்கு முழுமையான தீர்வை வழங்க வேண்டும்.கூகுள் தயாரிப்புகளின் நெடுநாளைய திட்டங்களை பின்பற்றி பணியாற்றுபவராக இருக்க வேண்டும். 
இந்தபணிக்கு பிஎஸ்சி டிகிரி (தொழில்நுட்பம்) அல்லது பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவமும் இருக்க வேண்டும். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வேலை நேரத்தில் 40 சதவிகிதம் உலகில் பல நாடுகளுக்குள் பயணம் மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 
அக்கவுண்ட் மேனேஜர், நிதிச்சேவை, சிஸ்டம் வடிவமைப்பாளர், நிதிச்சேவை, வங்கிப்பணி, திட்ட மேலாளர் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

5. கார்ப்பரேட் ஆபரேசன் எஞ்ஜினியர்
கார்ப்பரேட் ஆபரேசன் எஞ்ஜினியர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஹார்டுவேர், சாப்ட்வேர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தொழில்நுட்ப பிரிவில் வல்லமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி பி.ஏ அல்லது பிஎஸ்சி பட்டம், அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டுகள் லினக்ஸ், விண்டோஸ் ஓஎஸ் திட்டப்பணிகளில் டீம் லீடர்களாக இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெய்தான் கோடு மொழி தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

6.ஹார்டுவேர்டு ஆபரேசன்  எஞ்ஜினியர்
இந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூகுள் சர்வர், சர்வர் சாஃப்ட்வேர், ரூட்டர்ஸ், ஸ்விட்சஸ், ஹப்ஸ் ஆகியவைகளில் ஹார்டுவேர்களை பொருத்தவும், நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படுவர். கூடுதலாக லினக்ஸ் ஓஎஸ் பிரிவில் எழும் பிரச்னைகளை கையாள வேண்டும். பிஏ, பிஎஸ்சி, அல்லது பணிக்கேற்ற 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கில அறிவுடன் ஹிந்தி அல்லது மராத்தி மொழிகள் தெரிந்து இருப்பது அவசியம். 

7. க்ளவுட் என்ஜினியர், கூகுள் ப்ரஃபசனல் சேவை
இந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிரந்திய மற்றும் சர்வதேச அளவில் வெப் டெவலப்பர், சிஸ்டம்ஸ் அட்மினிஸ்டேட்டர்ஸ்களின் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். கூகுள் கள்வுட் வர்த்தகத்தை அதிகரிக்க சேவையாற்ற வேண்டும்.
இந்தபதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலை பட்டப்படிப்பு (கணினி அறிவியல், கணிதம்) அல்லது தொழில்நுட்ப பிரிவில் போதிய அனுபவம் இருக்க வேண்டும். டெவலப்பிங், நிர்வகிப்பதில் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சி++. ஜாவா அறிந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூகுள் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.