நீட் தேர்வு முகநூல்
கல்வி

நீட் தேர்வு முறைகேடு - 63 மாணவர்கள் தகுதி நீக்கம்; அதிரடி காட்டிய தேசிய தேர்வு முகமை!

PT WEB

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பு இந்திய அரசு புதிய கல்வி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

நீட் தேர்வு

இதற்காக அமைக்கப்பட்ட சிபிஐயின் சிறப்பு விசாரணை குழுக்கள், குஜராத் மாநிலம் கோத்ராவிற்கும், பீகார் மாநிலம் பட்னாவிற்கும் விரைந்துள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது.

குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.