பல்கலைக்கழக மானியக்குழு முகநூல்
கல்வி

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நான்காண்டு இளங்லை பட்டப்படிப்பு முடிச்சிருக்கிங்களா? அப்புறம் 'Phd'தான்!

நான்காண்டு இளங்லை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பான Phd படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

PT WEB

நான்காண்டு இளங்லை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பான Phd படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு தலைவரான ஜெகதீஷ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில், ”நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேட் பெற்ற மாணவர்கள், நேரடியாக NET தேர்வு எழுதலாம் மற்றும் பிஹெச்டி படிக்கலாம்.

மேலும், SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பிற வகை விண்ணப்பத்தாரர்களுக்கு யுஜிசியின் முடிவுபடி 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படலாம். இதுவரை NET தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.