கல்வி

பொறியியல் 3-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..!

பொறியியல் 3-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..!

Rasus

பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன.

மூன்று சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கையில் உள்ள சிக்ரி ஆகிய 3 கல்லூரிகளின் 100 சதவிகித இடங்களும் நிரம்பி உள்ளன. 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.

10 கல்லூரிகளில் 90 முதல் 98 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 12 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 23 கல்லூரிகளில் 60 முதல் 79 சதவிகித வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட இதுவரை நிரம்பவில்லை. 115 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

மொத்தமுள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களில் 26 சதவிகிதமான 45 ஆயிரத்து 662 இடங்கள் நிரம்பியுள்ளன. 37 ஆயிரத்து 598 மாணவர்கள் 4ஆவது மற்றும் இறுதி சுற்றுக் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.