கல்வி

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு

Sinekadhara

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அந்த வழக்கு விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும் என நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு, திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றதாகவும், அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு தற்போது அறிவிப்பாக வெளியிடுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

அதன்படி, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.