கல்வி

11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Sinekadhara

11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

11ஆம் வகுப்பில் மாணவர்கள் விரும்பும் பிரிவில் சேர, அப்பிரிவு குறித்து கொள்குறி முறையில் சிறு நுழைவுத் தேர்வு நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தநிலையில், தற்போது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர் சேர்க்கைக்கு கோரும்நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 வரையிலான கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பிரிவுக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தத் தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.