கல்வி

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் - சிபிஎஸ்இ

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் - சிபிஎஸ்இ

kaleelrahman

நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுமா திறக்கப்படாத என்று சூழ்நிலை இருக்கும் போது சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பயிலும்10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதனால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதேபோல ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன


பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த தமிழக அரசு பின்னர் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என ஆலோசனை கேட்டது. இதில் 50%க்கும் அதிகமானோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் பள்ளிகள் திறப்பதை ஒத்திவைத்தது அரசு.


இந்நிலையில் மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பயிலும்10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலர் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தேர்வுகள் நடைபெறுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது