Chennai Super Kings  Facebook
Cricket

CSKvsRR: இன்றைய ஆட்டத்தில் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி பங்கேற்பார்களா..? பீதியில் சிஎஸ்கே

சென்னை அணியில் 3 முக்கிய வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

Justindurai S

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு காத்திருக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்குமென்பதால் இன்று கூடுதல் சுவாரஸ்யத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

அதேநேரம் சென்னை அணியில் நிறைய வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.

Chennai Super Kings

இதே போல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்று தெரிகிறது. அதேபோல் மொயீன் அலி இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் தலா இரு அரைசதம் நொறுக்கியுள்ளனர். கேப்டன் சாம்சன், ரியான் பராக் மற்றும் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகம் தீட்டியுள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறப்பது உறுதி.

யார் ஆதிக்கம்?

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்-ல் 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை 15, ராஜஸ்தான் 12ல் வென்றன. இதில் கடைசியாக நடந்த 5 போட்டியில் ராஜஸ்தான் அணி, சென்னையை நான்கு முறை வீழ்த்தியது. சேப்பாக்கம் ஆடுகளத்தை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். போக போக மெதுவான தன்மையுடன் மாறும். இந்த ஆடுகளத்தில் ஆனால், மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் 170–175க்கு அதிகமான ஸ்கோரை ‘சேஸ்’ செய்வது கடினம் ஆகும்.

போட்டிக்கான சிஎஸ்கே அணியின் உத்தேச பட்டியல்:-

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், மட்செல் துஷானா, மட்செல் சான்ட்னர்