சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 100 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்த மீதமிருந்த 2 பேர் தப்பியோடியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசபட்டு காப்புக்காடு பகுதியில் 7 பேர் கொண்ட ஒடுக்கத்தூர் வனச்சரக வனத்துறையினர், நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அப்போது மரம் வெட்டும் சந்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது சிலர் வனப்பகுதியில் உள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்துவது தெரியவந்துள்ளது.
இதனால் அவர்களை விரட்டிச்சென்று பிடித்துள்ளனர். அப்போது தொங்கு மலைபகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் இருந்து சுமார் 100 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை, கத்தி, கோடாரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பிபோடிய அதே பகுதியை சேர்ந்த கலையரசன், சிவராமன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரகாஷிடம் தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 வரும் சந்தன மரங்களை வெட்டி வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.