குற்றம்

பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த புரோக்கர்கள் கைது

பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த புரோக்கர்கள் கைது

webteam

சென்னை முழுவதும் சோதனை செய்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழகம், கொல்கத்தா,மும்பை,திரிபுரா,ஆந்திரா என பல மாநிலங்களில் இருந்து புரோக்கர்கள் மூலம் விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்ததின் பெயரில், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நாங்கு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவின் பெயரில் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 70 பிரிவுகளாக பிரிந்து  மசாஜ் சென்டர், கிளப், ஹோட்டல்,நட்சத்திர ஹோட்டல், தனியார் தங்கும் விடுதி, என சென்னை முழுவதும்  60-க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை செய்தனர். இதில் 90 விபச்சார புரோக்கர்களும் மற்றும் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த 183 பெண்களையும் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
அதில் வட மாநிலத்தை சேர்ந்த யோகேந்திர காசித், பிரசாந் ராஞ்சன் நந்தா, அலிமா பானு ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

இது குறித்து விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சி. சாம் வின்சேன்ட் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 183 பெண்களை மீட்டு
அவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினார். விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் உடல் ரீதியாக வரும் மற்றும்  உங்கள் குடும்பம் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்கும் என்பது குறித்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்பு, கைது செய்யப்பட்ட பெண்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். எப்போதும் இல்லாத அளவிற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் குறுகிய நாட்களில் சோதனை செய்து புரோக்கர்களை கைது செய்து உள்ளனர். மேலும் இந்தச் சோதனை தொடரும் என்றும் தெரிவித்து உள்ளனர்.