accused pt desk
குற்றம்

சென்னை: திருமணமாகாத இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

திருமண தகவல் ஆப் மூலம் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து தொடர் மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (33). இவர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவர் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி மேட்ரிமோனியில் இணையதளத்தில் தனது சுய விவரத்தை பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.

letter copy

அதே வலைதள பக்கத்திலிருந்த ஆந்திர மாநிலம் வெங்கட்ராமன் என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா என்பவரை அசோக் சைதன்யாவுக்கு பிடித்துப் போயுள்ளது. இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தனது புகைப்படம் எனக் கூறி சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார் சந்தியா. அதன்பின் சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் வரை பணத்தையும், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் சந்தியாவின் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார் சந்தியா.

இந்நிலையில் திருமணம் குறித்து பேசும் போதெல்லாம் மறுப்பு தெரிவித்ததோடு சில நாட்களுக்குப் பிறகு அசோக் சைதன்யாவின் தொலைபேசி எண்ணை சந்தியா பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அசோக் சைதன்யா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆவடி காவல் ஆணையரக இணையம் வழியாக குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த ஷ்ரவண சந்தியாவை கையும் களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

விசாரணையில் அவர், திருமணமாகாத ஆண்களை குறி வைத்து ஹனி டிராப் முறையில் ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு, அவர்களை பிளாக் செய்ததும், அந்த பணத்தை வைத்து பெங்களூருவில் உள்ள வேறு சிலருடன் பழகி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.