குற்றம்

செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நடுரோட்டில் பைக் சாகசம்... கண்டுகொள்ளுமா காவல்துறை?

செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நடுரோட்டில் பைக் சாகசம்... கண்டுகொள்ளுமா காவல்துறை?

webteam

செங்கல்பட்டு மாவட்டத்தில் விலையுயர்ந்த 6 இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், மது போதையில் உயிர் பயமின்றி இருசக்கர வாகனத்தில் பைக் சாகசம் செய்தபடி வாகனத்தை ஓட்டி வந்ததால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.

புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வரும் சூழலில், தலைகவசம் அணியாமல் வாகனம்யோட்டி காவல்துறையிடம் சிக்கி 1,000 ரூபாய் அபராதம் பெற்றுவருகின்றனர்.

இப்படியான சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் டூ ‌‌‌ஸ்ரீபெரும்புதூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தெள்ளிமேடு ஆப்பூர் வரை, விலையுயர்ந்த 6 இரு சக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் சிலர், மதுபோதையில் சாலை விதிமீறல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸர்களாக சாகசம் புரிந்தனர். இதைக்கண்ட அவ்வழியாக பயணம் மேற்கொண்ட வாகன ஒட்டிகள் சிலர் அதை வீடியோ எடுத்து, அதனை வெளியிட்டு வேதனை தெரிவிக்கின்றனர்.

சாதாரண மக்களிடம் காராறாக நடந்துக்கொள்ளும் காவல்துறையினர், இது போன்று உயிரை பிணையம் வைத்தும், அடுத்தவர்கள் உயிரை பறிக்கும் வகையில் சாலையில் மதுபோதையில் சாகசம் காட்டும் இளைஞர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.