Police station pt desk
குற்றம்

சென்னை: ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன திருட்டு – வடமாநில சிறுவன் கைது

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் அந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது பணம் வராமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக மட்டும் குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கியில் புகார் அளித்துள்ளனர்.

North state boy

அப்பொழுது சந்தேகப்படும் படியான சிறுவர் ஒருவர் ஏ.டி.எம் மெஷினை போலி சாவியால் திறந்து பணத்தை எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த நபர் ஒருவர், வடமாநில சிறுவனை கையும் களவுமாக பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவன், ஏ.டி.எம்., மெஷினில் பணம் வெளியே வரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்துள்ளான். இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏ.டி.எம் மெஷினில் உள்ளேயே இருந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வந்து சென்ற பின் சாவியால் ஏ.டி.எம். மெஷினை திறந்து பொதுமக்களின் பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

Seized

இதைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 ஏ.டி.எம் கார்டு மற்றும் இரண்டு சாவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.