கோவையில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்குள் ஒருவரது இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர் (48). நேற்று சுபேரின் தந்தை இருசக்கர வாகனத்தில் பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகைக் கடை சென்றார். கடை வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, பொருட்களை வாங்கினார்.
பின் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. மளிகை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், பேக் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து சுபேர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.