மாணவன் உட்பட இருவர் கைது pt desk
குற்றம்

ராமநாதபுரம்: போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி - மாணவன் உட்பட இருவர் கைது

ராமநாதபுரத்தில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்து மருத்துவப் படிப்பில் சேர முயன்ற மாணவரையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்து ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார். இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியதிலும் 720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Arrested

ஆனால் இம்முறை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் பட்டியலை எடிட் செய்துள்ளர். இதையடுத்து போலியான மதிப்பெண் பட்டியலை தயார் செய்து அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு, தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.

(மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது)

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.