குற்றம்

தேனி: அரசு அதிகாரியை கொல்ல முயன்ற இளநிலை உதவியாளர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தேனி: அரசு அதிகாரியை கொல்ல முயன்ற இளநிலை உதவியாளர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

JustinDurai

தேனியில் அரசு அதிகாரியை கொலை செய்ய முயன்ற இளநிலை உதவியாளர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனியில் கடந்த மே 30-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி ராஜேஸ்வரியை, இளநிலை உதவியாளர் உமாசங்கர் என்பவர் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததால், ராஜேஸ்வரியை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உமாசங்கரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: மதுரை: வறுமையில் வாடும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் மீது பாய்ந்த குண்டாஸ்