குற்றம்

திருவள்ளூர்: பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 3 டன் செம்மரக்கட்டைகள் - 3 பேர் கைது

திருவள்ளூர்: பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 3 டன் செம்மரக்கட்டைகள் - 3 பேர் கைது

kaleelrahman

கும்மிடிப்பூண்டியில் பழைய இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டருந்த 3 டன் செம்மரக்கட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள புதுப்பேட்டை பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல் துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த விஷ்வானந் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த தகவலின்பேரில் இம்ரான், ரவீந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்த இருந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.