சிறுமிகள் குறித்து தவறாக பாடல் பாடிய நபர் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிககலாம் என திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யூடிபில் இளைஞர்கள் இருவர் கானா பாடலொன்றை பாடியுள்ளனர். அதில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள், மிகுந்த வன்மத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கானா பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் டிவிட்டரில் குறிப்பிட்டு, அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாகவும், இவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இனி வரும் நாள்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கவும், அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.