குற்றம்

திருவள்ளூர்: ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ்

திருவள்ளூர்: ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ்

webteam

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில் கைதான 10 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த மனோகரன் (40). முன்விரோதம் காரணமாக கடந்த மே மாதம் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், சுந்தர பாண்டியன், பத்மநாபன் உள்ளிட்ட 10 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 10 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

கொலை வழக்கு ஒன்றில் ஒரே நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், ஆவடி ஆணையரகம் உருவாகி ஒரு ஆண்டில் மட்டும் 88 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.