செய்தியாளர்: சுரேஷ்குமார்
திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் உதவி ஆணையர். அணில் குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீடு ஒன்றில் 15 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகோர் மகானந்தா, பிங்கு பிபார், சிபா மகானந்தா சுப்ராட் பெரோ, நித்ய நந்தா போரிடா, ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.